உள்ளடக்கத்துக்குச் செல்ல
நல்லை குருஷேத்திரம்Nallai Kurukshetram

ஆசிரியர் பற்றி

சின்னையா துரைராஜா அவர்களின் வாழ்க்கையும் இசையும்.

சின்னையா துரைராஜா அவர்கள் 46 வருடங்களாக மிருதங்க இசைப் பயணத்தைத் தொடர்கிறார். இக்காலத்தில் 5500க்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ள இவர், நூற்றுக்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களுக்கு மிருதங்கம் வாசித்துள்ளதுடன், 1991 முதல் வட இலங்கை சங்கீத சபையின் (NCOMS) பிரதம பரீட்சகராகவும் கடமையாற்றி வருகிறார்.

சில வருடங்களாகத் துணை விரிவுரையாளராகவும், பாடசாலைகளில் சங்கீத ஆசிரியராகவும் கடமையாற்றிப் பணி நிறைவு செய்தார்.

வட இலங்கை சங்கீத சபையின் வாழ்நாள் உறுப்பினராகவும், குழு உறுப்பினராகவும், மூன்று வருடங்கள் பொருளாளராகவும் கடமையாற்றியுள்ளார். மேலும் 1991 முதல் இன்று வரை தரம் 1 முதல் 6 வரையான பரீட்சைகளுக்குப் பிரதம பரீட்சகராகக் கடமையாற்றி வருகிறார்.

வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தர நடன ஆற்றுகைகளுக்கு 610க்கும் மேற்பட்ட கலாவித்தகர்களுக்கு மிருதங்கப் பக்கவாத்தியக் கலைஞராக வாசித்துள்ளார். வயலின், வீணை, வாய்ப்பாட்டு அரங்கேற்றங்கள் 25க்கும் மேற்பட்டவற்றுக்கு மிருதங்கப் பக்கவாத்தியம் வாசித்துள்ளதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட நடன அரங்கேற்றங்களுக்குப் பிரதான பக்கவாத்தியக் கலைஞராக மிருதங்கம் வாசித்துள்ளார். 25க்கும் மேற்பட்ட ஈழத்துக் கோவில்களின் இறுவட்டுகளுக்கும் பக்கவாத்தியக் கலைஞராக மிருதங்கம் வாசித்துள்ளார்.

பல இந்தியப் பாடகர்களின் பாடல்களுக்குப் பக்கவாத்தியமாக வாசித்திருந்தாலும், முத்து கந்தசுவாமி தேசிகர் அவர்களுக்கு வாசித்தமையும், யாழ்ப்பாணம் வள்ளலார் கலையரங்கத்தில் மூன்று வருடங்களாக இந்தியாவிலிருந்து வருகை தந்த பாடகர்களுக்கு மிருதங்கம் வாசித்தமையும் குறிப்பிடத்தக்கவை.

12க்கும் மேற்பட்ட தனது மாணவர்களுக்கு மிருதங்க அரங்கேற்றம் செய்து வைத்துள்ளார்; இவர்கள் இந்தியா, லண்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. வருடம்தோறும் நல்லை குருஷேத்திரம் நடத்தும் ‘தண்ணுமைப் பிரவாகம்’ நிகழ்வில் ஒவ்வொரு வருடமும் 60 தொடக்கம் 70 மாணவர்களை மேடையேற்றி அழகு காண்கிறார். 46 வருட மிருதங்க இசைப் பயணத்தில் ஏறத்தாழ 5500க்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கியுள்ளார்.

சிறப்புகள்

  • 1991

    1991 முதல் இன்று வரை வட இலங்கை சங்கீத சபையின் தரம் 1–6 பரீட்சைகளுக்குப் பிரதம பரீட்சகர்.

  • 610+

    சபையின் ஆசிரியர் தர நடன ஆற்றுகைகளில் மிருதங்கப் பக்கவாத்தியம் வாசித்த கலாவித்தகர்கள்.

  • 25+

    வயலின், வீணை, வாய்ப்பாட்டு அரங்கேற்றங்களுக்கு மிருதங்கப் பக்கவாத்தியம்.

  • 100+

    நடன அரங்கேற்றங்களுக்குப் பிரதான பக்கவாத்தியக் கலைஞர்.

  • 12+

    தனது மாணவர்களுக்கு மிருதங்க அரங்கேற்றம்; இவர்கள் இந்தியா, லண்டன், ஆஸ்திரேலியாவில் உள்ளனர்.

  • 25+

    ஈழத்துக் கோவில்களின் இறுவட்டுகளில் மிருதங்கப் பக்கவாத்தியம்.

  • 60–70

    தண்ணுமைப் பிரவாகம் நிகழ்வில் ஒவ்வொரு வருடமும் மேடையேறும் மாணவர்கள்.

வகித்த பதவிகள்

  • வாழ்நாள் உறுப்பினர், வட இலங்கை சங்கீத சபை
  • குழு உறுப்பினர், வட இலங்கை சங்கீத சபை
  • பொருளாளர், வட இலங்கை சங்கீத சபை (மூன்று வருடங்கள்)
  • பிரதம பரீட்சகர், தரம் 1–6 பரீட்சைகள் (1991 முதல் இன்று வரை)
  • துணை விரிவுரையாளர் மற்றும் பாடசாலை சங்கீத ஆசிரியர் (பணி நிறைவு)

அவரது நூல்களும் பாட ஒலிப்பதிவுகளும் நூலகத்தில் உள்ளன.

அவரது நூல்களைப் பார்க்க
WhatsApp-இல் உரையாட